பலாலி வானூர்தி தளத்தை அண்டிய காணிகளின் நிலை என்ன?

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு சொந்தமான குறித்த காணிப்பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை விடுவிப்பதற்கான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகளை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிகாமம் தெற்கு, பலாலி வானூர்தி தளத்தை அண்டிய காணிகளும் அதில் உள்ளடங்குவதாகவும், இராணு முகாம்கள் மற்றும் வானூர்தி தளத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சு மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சுமார் 47 ஆயிரத்து 640 பேருக்கு கடந்த 3 ஆண்டுகளில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.