என் உயிர் போறதுக்குள்ள தென்னிந்திய நதிகளை இணைச்சுப் பார்க்கணும்!

நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய  ஆசை என்றும், அதை நிறைவேற்ற நான் உறுதியாக உழைப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான  ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த்  பங்கேற்றுப் பேசினார்.
அப்போது சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை.
புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. நேரம் வரும் போது வழி, ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள். பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பேன் என தெரிவித்தார்
.. 
அவ்வப்போது இமயமலைக்கு போவேன். அங்கே போவதே கங்கையை பார்க்கத்தான். அப்போதெல்லம் என மனம் நெகிழ்ச்சி அடையும்.
நதிகள் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிய ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என உருகினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.