ஆவணம் முன்வைத்த பின் மீண்டும் வழிநடத்தல் குழு கூடும்!

புதிய அரசியலமைப்பு வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கான ஆவணத்தை முடிவுறுத்தி ஒரு மாத காலத்திற்குள் தர வேண்டுமென வழிநடத்தல் குழு நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கூடியது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் நிபுணர் குழு புதிய அரசியலமைப்பு வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கான ஆவணத்தை இருவாரத்தில் முடிவுறுத்தித் தருவதாக தெரிவித்தது.

இந்நிலையிலேயே, ஆவணத்தை உறுதி செய்து ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டுமென வழிநடத்தல் குழு கூறியுள்ளது.

இந்த ஆவணம் முன்வைத்த பின் மீண்டும் வழிநடத்தல் குழு கூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது என வழிநடத்தல் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் மறுப்பக்கத்தில் கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் சிங்கள பௌத்த புத்திஜீவிகளை அணி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தேசிய ரீதியில் இவர்களுக்கு சவாலாக இருக்கக் கூடியவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். இந்நிலையில் அவர் மீது சேறு பூசி பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை ஐ.தே. கட்சிக்குள் ரணிலை பலவீனப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.

ஜே.வி.பி. 20 வது திருத்தத்தை முன்னெடுக்கவுள்ளது. இதனை வரவேற்கின்றோம். இதனுடன் விடயத்தை ஜே.வி.பி. மட்டுப்படுத்தக் கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.