சர்வதேச இறப்பர் மாநாடு!

சர்வதேச இறப்பர் மாநாடுWorld Rubber Summit  இம்மாதம் 7 அம் 8ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் அமைச்சரின் தலைமையில் சர்வதேச இறப்பர் அய்வுக்குழுவின் The International Rubber Study Group (IRSG) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2018 இறப்பர் மாநாடு தடைகளை முறியடித்து நிலையான அபிவிருத்தியை நோக்கி’Breaking Barriers towards Sustainable Growth’’ என்ற தலைப்பில் இம்முறை முதல் முறையாக இலங்கையில் நடைபெறவுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் 36 அங்கத்து நாடுகளின் பங்களிப்புடன் எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு தாஜ் சமூத்திரா ஹோட்டலில் காரல 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறப்பர் தொழிற்றுறையுடன் தொடர்புபட்ட இறப்பர் உற்பத்தி நாடுகள் விற்பனையாளர்கள் விநியோகஸ்தவர்கள் இரசாயன துறையைச்சார்ந்தோர் தயாரிப்பாளர்கள் தனியார் துறையினர்; அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பிதிநித்துவப்படுத்தி பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தெற்காசியாவில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை வளர்;சியடைந்துவருவதினால் இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது மாத்திரமின்றி உலகின் இறப்பர் துறையில் இறப்பர் கேந்திர் நிலையமாக இலங்கை எதிர்காலத்தில் திகழும் என்பதினால் இந்த மகாநாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்;.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.