யாழ் நகரை பசுமை திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு!

தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு யாழ் நகரை பசுமைப் படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று (04.05.2018) நடைபெற்றது.

எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதமாகும். அன்றயதினத்தில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான மரங்களை நாட்டுவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், யாழ் மாநகர நகரபிதா இம்மானுவேல் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நீர்பாசனத்திணைக்களம் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் சாரணர், லயன்ஸ் கழகங்கள், கலந்து கொண்டனர்.

யாழ் நகரபிதா ஆனோல்ட், விவசாய அமைச்சர் சிவநேசன் ஆகியோருடன் இணைந்து ஆளுநர் செயலகம் உட்பட அனைத்து திணைக்களங்களின் பங்களிப்புடன் யாழ் நகரை பசுமைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.