யாழ் பல்கலை பேரவை நியமனம் குறித்துத் தமது வன்மையான கண்டனப் பதிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை நியமனம் குறித்துத் தமது வன்மையான
கண்டனங்களைப் பதிவு செய்வதோடு, பேரவை நியமனம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் கோரி 36 போ் கையொப்பமிட்ட மகஜா் ஒன்று உயா்கல்வி அமைச்சா் விஜயதாஸ ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் 36 போ் கையொப்பமிட்டு, உயா்கல்வி அமைச்சா் விஜயதாஸ ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு 
யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவைக்கு ஆள்களை நியமிப்பது தொடா்பில் கீழே கையொப்பமிட்டுள்ள நாம் எமது அதிருப்தியை இத்தால் வெளிப்படுத்துகிறோம். இந்த நியமனத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தவறியிருக்கிறது. 
முன்னா் இருந்த பேரவையின் பதிவிக்காலம் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதியுடன் முடிவுற்ற போதிலும், முன்னா் பதவி வகித்த உயா்கல்வி அமைச்சா் பதவி விலகிய பின் புதிய அமைச்சாின் சத்தியப்பிரமானம் மே 1 ஆம் திகதி இடம்பெற, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் வெளிநாடு சென்றுள்ள நிலையில் மே2 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்துக்குத் தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.  
முன்னைய பேரவையில் இருந்த பேரவையில் இருந்த உறுப்பினா்களில் யாரைத் தொடா்ந்தும் தக்க வைத்துக் கொள்வது?, யாரை வெளியேற்றுவது என்பது தொடா்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடந்து கொண்டுள்ள விதம் எம்மைக் குழுப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாகப் பேராசிரியா் எஸ்.தா்மரட்ணம் அவா்களை புதிய பேரவைக்குத் தெரிவு செய்யாமை எமக்குப் பேரதிர்ச்சியாகும். 
பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற நியமனங்களின் போது அவா் நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்பவா். மிகவும் நோ்மையான ஒருவா். குறிப்பாக பேரவை உறுப்பினா்களின் வழக்கமான கடமைக்கும் அப்பால் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பில் வெளிப்படையாக வாதாடி வந்தாா். இத்தகைய பிரச்சினைகளுக்காகவெல்லாம் குரல் கொடுக்கக் கூடிய ஒருவா் அவா். 
அதைப்போலவே பல்கலைக்கழகத்தில் நடந்த மரக் கடத்தல் விவகாரம், முகாமைத்துவ பீடத்தில் பீடாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்றவிதத்தில் தகுதியற்றவா்களுக்கு வழங்கப்பட்ட நியமனம் ( உயா்நீதி மன்ற வழக்கிலுள்ள) போன்ற விடயங்களிலும் இவா்கள் உரத்துக் குரல் கொடுத்து வந்துள்ளனா்
பல்கலைக்கழகத்தின் நீதிக்குப் புறம்பான அத்தனை நடவடிக்கைகளுக்காகவும் பேரவையில் குரல் கொடுத்து வந்த பேராசிரியா் தா்மரட்ணம், வைத்தியா் ஜெயக்குமரன்ஆகியோரைப் பேரகை்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இதன் மூலமே யாழ். பல்கலைக்கழகத்தைச் சரியான பாதையில் இட்டுச் சென்று அதன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.