இனவாதத்தை விதைக்கிறார் கோத்தா!

ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு
தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் கோத்தபாய ராஜபக்ச, தனது உண்மை உருவத்தை மறைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கீழ்த்தரமான இனவாதத்தைக் கையிலெடுத்துள்ளார்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்து வரும் இனவாதக் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் ஏற்படுத்திய எதிரொலி, இனவெறியில் தோய்த்தெடுக்கப்பட்டு எடுத்தாளப்பட்டு வருகிறது. இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு காணும் மகிந்த ராஜபக்ச அணியினர் மீண்டும் போர் ஆரம்பிக்கப்போகிறதெனவும், நாடு பிளவுபடப் போகிறதெனவும் ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வட மாகாண சபையைக் கலைக்க வேண்டுமெனவும், வட மாகாண முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். சட்டம், ஒழுங்கு அமைச்சரோ மாகாண சபைக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடும்படி கேட்டுக் கொண்டமைக்காக மாகாண சபையின் கல்வி அமைச்சர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளார்.

உரிமையில்லை

இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தி. தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறவோ, அஞ்சலி செலுத்தவோ உரிமையில்லை என்பதாகும்.
உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நாட்டைப் பிளவு படுத்திவிடுமெனவும், மீண்டும் போரை ஆரம்பித்து விடுமெனவும் சிங்கள மக்களை அச்சமூட்டி அரசியல் செய்யுமளவுக்கு கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டு வருகிறனர்.

அந்த இன அழிப்புப் போரின் வீர நாயகனாக வலம் வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த நினைவேந்தல் நிகழ்வு நாட்டையே அழிவை நோக்கிக் கொண்டு போகுமளவுக்கு அபாயகரமானதெனச் சித்திரித்துள்ளார்.

பல்வேறு ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் இவர், தனது உண்மை உருவத்தை மறைக்க கீழ்த்தரமான இனவாதத்தைக் கையிலெடுப்பதும், படையினரைக் காக்கும் ஆபத்தாந்தவனாகக் காட்டிக் கொள்வதும் ஆச்சரியப்படக்கூடிய விடயங்களல்ல.
விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுகின்றனர் எனவும், உயிர் நீத்த புலிகளை நினைவுகூரவும், தூபி அமைக்கவும் அனுமதியளிக்கப்படுகிறதெனவும் படையினர் கைது செய்யப்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடத்தப்பட்டவர்கள் எங்கே ?

போரில் கொல்லப்பட்ட பொது மக்கள்கூட அவர்களுக்குப் புலியாகத் தெரிகிறது. புலிகளோ அல்லது பொது மக்களோ அவர்கள் எங்கள் உறவுகள், எங்கள் இரத்தங்கள். அவர்களை நினைவுகூர எங்களுக்கு உரிமையில்லையா? அழுவதற்குக்கூட உரிமையற்ற அடிமைகளா நாங்கள்? புலிகளெல்லாம் விடுவிக்கப்படுகின்றனரென்றால் அரசியல் கைதிகளாக விசாரணையின்றி, விடுதலையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் யார்?

படையினரால் கைது செய்யப்பட்டும், படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டும், காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் எங்கே? வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், திருமலை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் எங்கே? எப்போது விடுவிக்கப்பட்டனர். முன்னாள் பாதுகாப்புச் செயலர் அதிகாரத்தில் இருந்தபோது நடைபெற்ற இத்தகைய மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கு அவரால் விளக்கமளிக்க முடியுமா?

ராணுவத்தினர் புனிதர்களா ?

இராணுவத்தினர் சிறையிலடைக்கப்படுவதாக அவர் கண்ணீர் விடுகிறார். தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் போர்க் களத்தில் துப்பாக்கி ஏந்தியமைக்காகவா கைது செய்யப்பட்டனர். அப்படி எவரும் கைது செய்யப்படவில்லையே! கப்பம் கோரி இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.

சித்திரவதை முகாம்களை நடத்தியமைக்காகக் கைது செய்யப்பட்டனர். அவன் காட் விவகாரத்தில் ஊழல் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர். ஊடகவியலாளரை வீதியில் வைத்துக் கொலை செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர். அந்தக் கொடூரமான மனிதகுல விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் புனிதர்களா? விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காகப் போராடி உயிர் துறந்த விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா?

போர் உயிர்களைக் கொல்கிறது, சொத்துக்களை அழிக்கிறது, மக்களைத் தாங்க முடியாத துன்ப துயரங்களில் தள்ளுகிறது? ஆனால், ஒரு சிலர் போரினால் கோடி கோடியாகக் குவிக்கின்றனர். ஆயுதங்கள், ஆயுத தளபாடங்கள், போர் வாகனங்கள், சீருடைகள் போன்ற பொருள்கள் கொள் முதலில் கோடி கோடியாகத் தரகுப் பணம் பெறுகின்றனர். படையினருக்கான உணவுப் பொருள்கள், சிகரெட், மது வகைகள் என்பனவற்றின் விநியோகத்திலும் தரகுப் பணம் கிடைக்கிறது.

அதிகாரத்தில் உள்ள இந்தக் கூட்டமோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ போர்க் காலங்களில் போராடுவது இல்லை. உயிர்களை இழப்பதும் இல்லை, உடல் ஊனமுறுவதுமில்லை.

இழப்புக்கள் பற்றி அக்கறையில்லை

ஆனால், ஆயுதப் படையினரின் கரங்களில் போரிட்டு மடிபவர்கள் சாதாரண பொது மக்களின் பிள்ளைகள். போரின் துன்ப துயரங்களைச் சுமப்பவர்கள் பொது மக்கள். அதிகாரத்திலுள்ள கூட்டம் சாதாரண படையினரின் உயிரிழப்பு பற்றியோ, பொது மக்களின் இழப்புகள் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவற்றுக்கு தியாகம், தேசப்பற்று எனப் பெயர் சூட்டியாக்கி விடுவார்கள்.

கோத்தபாய போன்றவர்கள் மீண்டும் ஒரு போரை விரும்புவதில் ஆச்சரியமில்லை. அவர்களைப் பொறுத்தவரை முதலீடு இன்றி லாபமடைவது போரில் மட்டும்தான் என்பதை நன்கு தெரிந்து வைத்தவர்கள். அவர்கள் பல்வேறு வழிகளிலும் ஒடுக்குமுறையை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துவார். ஏனெனில் ஒடுக்குமுறை வலுவடையும்போது எதிர்ப்பு எழும். எதிர்ப்பு எழும்போது போராட்டம் வெடிக்கும். இவர்கள் எவ்வளவுதான் தேசப்பற்று, நாட்டின் பிளவுபடாமல் காப்பது, நாட்டுக்காகத் தியாகம் செய்த படையினரைப் பாதுகாப்பது எனச் சொன்னாலும் அவற்றின் அடிப்படை போர் வெறிதான்.

மனிதகுல விரோதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மாகாணசபையினர் உயிரிழந்தவர்களை வைத்து உயிர் உள்ளவர்களின் அரசியல் செய்திருக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி என்பது உயிருள்ளவர்களின் அரசியல் என்றால் உயிரிழந்தவர்களுக்கான உண்மையான அரசியல் எது என்பதை அவர் தெரிவிப்பாரா?

போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் என்பது வெள்ளைவானில் கடத்திச் செல்வது காணாமல் போகச் செய்வது, கடத்திக் கொண்டுபோய் கொன்று புதைப்பது இனப் படுகொலைகளை நியாயப்படுத்துவது என்று அவர் நினைக்கிறாரா?

முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி என்பது அர்ப்பணிப்புடன் தங்களின் உரிமைகளைப் பெற போராடிய ஓர் இனம் அந்த புனித வேள்வியில் ஆகுதியான உயிர்களை நினைவு கூர்ந்து மனமுருகி மேற்கொள்ளும் ஒரு புனிதமான நினைவேந்தல். இது பற்றி கீழ்த் தரமான முறையிலோ கண்டனம் செய்தவர்கள் தவறான அர்த்தங்களைக் கொடுப்பவர்கள் என அனைவருமே மனிதகுலவிரோதிகள் என்பதை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.