யாழ்.மாநகரசபையில் முன்னணி மௌனம் காத்தது ஏன் என்பதன் தெளிவுபடுத்தல்!


08.05.2018 யாழ்.மாநகர சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக கௌரவ முதலமைச்சரிடம் மனு அளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இக் கூட்டத்தொடரில் சபையில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது என்று சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டன. இது பற்றி தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் என்ற ரீதியில் எனக்குள்ளது அந்த வகையில்
நாம் அளி;த்த மனுவில் எந்த இடத்திலும் ஊழல் நடைபெற்றதாக குறிப்பிடவில்லை. அதிகார துஸ்பிரயோகங்களும், சபையின் நியதிகளுக்கு முரணான செயற்பாடுகளும் நடைபெற்றதாகவே குறிப்பிட்டிருந்தோம். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கௌரவ முதலமைச்ர் அவர்களிடம் மனு ஒன்றினை அளித்திருந்தோம். அந்த நிலையில் இன்று மாநகர சபையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இச் சபையில் முதலமைச்சருக்கு வழங்கிய மனு தொடர்பிலான எந்த விடயங்களையும் நாம் சபையில் எழுப்பவில்லை. ஏன் எனில் நாம் அனைத்து விடயங்களையும் கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து விட்டோம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சபையில் நாம் கேள்வி எழுப்புவது ஏற்புடையது அல்ல.
நீதிமன்றொன்றில் கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளும் விளக்கம் கோருதலும் நீதிமன்றை விடுத்து வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அந்தவகையில் தான் கௌரவ முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் விசாரணைக்கும் மற்றும் நடவடிக்கைக்கும் கையளிக்கப்பட்ட மனு தொடர்பான விவாதத்தை வேறு இடத்தில் தொடருவதில் அர்த்தமில்லை. அது மாண்பும் இல்லை அந்த வகையில் தான் நாம் சபையில் இது தொடர்பில் அமைதியை பேணினோம்.

-வரதராஜன் பார்த்திபன்,-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.