காணாமல்போனோர் விடயத்தில் சர்வதேச வழக்கின் மூலம் உரியதீர்வு பெறப்படும்!

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட உரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள்  தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும் போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம்.

அத்துடன் காணாமல்போனோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.