வவுனியா நீதிமன்ற வாளாகம் முன் வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்!

வவுனியா நீதிமன்ற வளாகத்திற்கு முன் பதற்றம் , வீதியில் இறங்கிய சட்டதரணிகள்

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

 (10.05.2018) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்களின் தலமையில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் வீதியில் இறங்கி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் செல்லும் கைதிகள் மீது சிறை காவலர்கள், உத்தியோகத்தர்களால் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தே சட்டத்தரணிகள் வீதியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

இவ்வார்ப்பாட்டத்தில் தலமை தாங்கிய ஜனாதிபதி சட்டத்தரணியான சிற்றம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்படும் கைதிகள் மீது சிறை காவலர்கள்,உத்தியோகத்தர்கள் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கைதிகள் தூங்குவதற்கு சீரான இடம் கொடுப்பதற்கு ஒரு நாளுக்கு ஒருவரிடம் தலா 3000ரூபாய் பணம் இலஞ்சமாக பெறப்படுவதாகவும் , சிறைச்சாலைக்குள் கைதிகள் தொலைபேசி பாவனை செய்வதற்கும் இலஞ்சம் வாங்கி அந்த வசதிவாய்ப்பினை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுப்பதுடன், வவுனியா நீதிமன்றமானது போதை பொருள் பாவனைக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் போதிலும் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு சிறை காவலர்களின் அனுமதியுடன் பொதைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்திய அவர் தொடர்ந்தும் கூறுகையில்

இங்குள்ள சிறை காவலர்கள்,அதிகாரிகள்,உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எம்மால் இன்று நடாத்தப்படுகிறது என்று தெரிவித்தார்

ஒரு மணி நேரம் தொடர்ந்த இந்த ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி சட்டத்தரணியின் ஊடக அறிக்கையின் பின்பு நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.