Header Ads

Header ADS

புதன், 30 மே, 2018

யாழில் படையெடுக்கும் ஆயுதவாகணமும்.!அரவியல் வாதிகளும்!

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழருக்கு இனப்பிரச்சனை ஒன்று
உள்ளதா? என்று கேட்கின்ற வகையில் அவர்கள் சிந்தனை மாறியுள்ளது..!

மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கோரினால் அதுவும் பிரிவினைவாதமாக நோக்கும் அளவுக்கு இனவாதம் தலையேடுத்துள்ளது. வடக்கு மாகாணசபை தனக்கிருக்கும் அதிகாரத்தை முன்னேடுக்க முடியாதளவு தடைகள் போடப்படுகிறது.

இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது?
அற்ப சலுகைகளுக்காக தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து அரசின் அசைவுகளுக்கு இசைந்து சர்வதேசத்துக்கே நல்லாட்சி அரசு ISO தரச்சான்றிதழ் ஆனது என நம்மர்களே அவர்களுக்கு கொடுத்த சான்றிதழ் அவர்களை எம் தேசிய பிரச்சனையில் இருந்து நழுவி ஓட நாமே களம் அமைத்து கொடுத்துள்ளோம்.

இனி அடுத்து இவர்கள் என்ன செய்யபோகிறார்கள்?

இருவேறு கொள்கையுடைய கட்சியை நாம் நம்பியதால் ஏமாற்றமடைந்துள்ளோம் என திரு சுமந்திரன் வாயால் அறிக்கை வரும் அதோடு ஜனாதிபதி அவர்கள் தமிழ்மக்களின் வாக்கை பெற்று தமிழரை ஏமாற்றிவிட்டார் என அறிக்கைகள் இனிவரத்தொடங்கும். இடை நடுவே வழிநடத்தல் குழுவால் வழிமொழியபட்ட எழும்பு துண்டுகளுக்கு வாதப்பிரதி வாதங்கள் இடம் பெறும்..!

அற்ப சலுகைகளை அடையாளப்படுத்தும் அரசியலமைப்பு வரைவு ஆனது. இரு தேசியக்கட்சியில் ஒன்றை இனவாதிகளாக அடையாளப்படுத்தும் அது மகிந்த தலைமையில் அணிதிரளும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பால் ஐ தே க பறவாயில்லை என்ற பிம்பம் வளர்கப்படும்.

மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம் வரப்போகுது என தமிழரை மட்டுமல்ல சிங்கள மக்களையும் பயமுறுத்துவார்கள். தென்னிலங்கை மக்களின் நாப்பத்திமூன்று வீத வாக்குகள் ஐ தே க தன்வசம் வைத்துள்ளது. இது சிலநேரம் நாற்பத்தி எட்டாகவும் ஐம்பதாகவும் உயர்ந்து இறங்கும்.

இங்கு வடகிழக்கு சிறுபாண்மை மக்களின் வாக்கு அரச தலைவரை நியமிக்கிறது, யுத்தம் நிறைவடைந்து ஒருஇரு சந்தர்பத்தை தவிர்ந்து இதே நடைமுறையே அவதானிக்கபட்டுள்ளது.

இதில் இஸ்லாமிய சிறுபாண்மையின தலைமை தமக்கும் சலுகைகளை பெற்று தமது மக்களுக்காகவும் சேவை செய்வதற்கான பேரங்களை பேசி அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அமைச்சுகளையும் பெற்றிடுவார்கள்.

நமது மேதாவிகள் தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றிடுவர். சமூகம் சார்ந்து சிந்திப்பதில்லை. தங்களுக்குள் ஜனாதிபதியாக இவரை தீர்மானிப்பர் மக்களிடம் வந்து சர்வதேச கரிசனைகள்
U N P ஆட்சிக்கு வர விரும்புகிறது என்பர். நாம் சர்வதேசத்தை புறக்கணித்து செயல்ப்படமுடியாது என்பர்.

இவர்களின் இலக்கு இம்முறை தனிப்பெரும்பாண்மையுடன் ஐ தே க வை ஆட்சி அமைக்க செய்வதே.இதனூடாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே த தே கூ நிலைப்பாடு, இன்று த தே கூ தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இல்லாமல். சர்வதேச நலனை பூர்த்தி செய்வதன் ஊடாக அதன் தலைவர் ஒர்இருவர் பலமில்லியன் டொலர்களை ஈட்டுபவர்களாக மாறியுள்ளனரா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது தற்போது முழுக்க முழுக்க வியாபார அரசியலாக மாறியுள்ளது. தீர்வை அடையும் எந்த முகாந்தரமும் அதனிடம் இல்லை. ஏதோ ஒரு வகையில் தேசியம் பேசி கதிரையை பிடிப்பதே அதன் செயல்பாடாக உள்ளது.

சிறந்த மாற்றனி உருவாகது போனால் ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த பிரதமர் ரணிலின் மாறி மாறி வரும் ஆட்சியில் தொடர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சும்.

அன்புடன் ஸ்ரீரங்கன்.
தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.