அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த ராகுல்!

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் மிகவும் சிறப்பாக ஆடிவரும் லோகேஷ் ராகுல், பேட்டிங் தொடர்பான அனைத்திலும் முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அஸ்வின் தலைமையில் வெற்றிகரமாக இந்த சீசனை தொடங்கிய பஞ்சாப் அணி, இரண்டாம் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. 
இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அனைத்து போட்டிகளிலும் அளித்துவருவது ராகுல் தான். தொடக்க வீரராக களமிறங்கி அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார். நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடிய ராகுல், 94 ரன்கள் எடுத்த நிலையில், 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததால், பஞ்சாப் அணியும் தோல்வியுற்றது. இவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்த சீசனில் சிறப்பாக ஆடியதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் இடம்பிடித்தார். இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் ஆடி 652 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரன்களில் மட்டுமல்லாமல் அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள் ஆகியவற்றிலும் ராகுலே முதலிடத்தில் உள்ளார். 13 போட்டிகளில் ஆடி, 65 பவுண்டரிகளும் 32 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இதுவரை இந்த சீசனில் தனிப்பட்ட வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள், சிக்ஸர்கள் இதுதான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.