துப்பாக்கிச்சூடு நெஞ்சை பதைக்க வைக்கிறது-சத்யராஜ்!

துப்பாக்கிச்சூடு நெஞ்சை பதைக்க வைக்கிறது,
வேதனைப்படுத்துகிறது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்பி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தச் சம்வபங்களுக்குஅரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ள சத்யராஜ், “தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேரின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சை பதைக்க வைக்கிறது. நெஞ்சை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக.” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.