முள்­ளி­வாய்க்­கால் பெருந்­து­ய­ரை­ முன்னிட்டு- கனே­டிய தலைமை அமைச்­சர் அறிக்கை!

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் கொன்று குவிக்­கப்­பட்ட இறு­திப்­
போ­ரின் முள்­ளி ­வாய்க்­கால் நினைவு தினத்­தை­யொட்டி கனே­டிய தலைமை அமைச்­சர் ஜஸ்­ரின் ரூடோ நேற்று அறிக்­கை­யொன்றை விடுத்­துள்­ளார்.
நல்­லி­ணக்­கம், மீள­நி­க­ழாமை, அமைதி மற்­றும் நீதி, என்­ப­வற்றை அடை­வ­தற்­கான இலங்கை அர­சி­னு­டைய முயற்­சி­க­ளுக்கு கனடா முழு­மை­யான ஆத­ரவு வழங்­கும் என்று அவர் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்்.
பொறுப்­புக் கூறல், நிலை­மா­று­கால நீதி, குற்­ற­வா­ளி­கள் தண்­ட­னை­யில் இருந்து தப்­பிக்­கும் போக்கை முடி­வு­றுத்­தல், என்­ப­வற்­றின் மீது உள்­நாட்­டி­லும், பன்­னாட்­டுச் சட்­டத்­தி­லும் இலங்­கைக்­குள்ள பொறுப்பை நிறை­வேற்ற அரசு எடுக்­கும் முயற்­சிக்­கும் கனே­டி­யத் தலைமை அமைச்­சர் தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளார்.
போர் நிறை­வுற்று 9ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு அவர் இந்­தச் சிறப்பு அறிக்­கையை நேற்று வெளிட்­டார். போரால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது இழப்­புக்­கான பதிலை வேண்டி நிற்­கின்­றார்­கள் என்­றும் அவர் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.
” போரில் தப்­பிப் பிழைத்­த­வர்­க­ளின் நம்­பிக்­கையை வெல்­லக்­கூ­டி­ய­து­மான பொறுப்­புக்­கூ­றல் செயற்­பா­டு­களை இலங்கை அரசு உரு­வாக்க வேண்­டும்” என்­றும் அவர் தனது அறிக்­கை­யில் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.