அரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு!

உயர் பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அரசாங்க வங்கிகளில் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரிகள் தற்பொழுது அந்தந்த நிறுவனங்களினால் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

நிதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகள் தங்களது சம்பளத்திற்கு ஏற்ற வகையில் செலுத்த வேண்டிய வரிகளை அந்தந்த நிறுவனங்களே தற்பொழுது செலுத்தி வருகின்றன.

இது அநீதியானது எனவும் இதனால் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட வரிச் சட்டத்தில் மீளவும் திருத்தங்களைச் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், அமைச்சர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்யக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வது சம்பளம் அல்ல எனவும் கொடுப்பனவே வழங்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.