கிளிநொச்சியில் சாராயக் கடை வேண்டும்–சிறீதரன்!

யாழ்ப்பாணத்தில் 64 சாரயக் கடைகள் உள்ளன. ஆனால் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவனையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு சாரயக் கடைகளை புதிதாக அமைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்

நேற்று(03) கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதன் போது பெரிய பரந்தன் கிராமத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமையவுள்ள விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட போது குறித்த பிரதேசத்தின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் இளங்கோ, ரஜனிகாந் ஆகிய பிரதே சபை உறுப்பினர்கள் அதற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.


பெரிய பரந்தன் பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருப்பதோடு, பெரும்பாலனவர்கள் பனை தென்னைவள தொழில் செய்கின்றவர்களாகவும் உள்ளனர் எனவே புதிதாக மதுபானசாலை அமைப்பது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என அவர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால் அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். இவ்வாறு நீதி மன்றத்தை நாடிய சம்பவம் பருத்திதுறையிலும் இடம்பெற்றுள்ளது. எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் சகிப்பு கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருள் பாவனைகள் அதிகரித்து காணப்படுவதனால் அதனை குறைப்பதற்கு புதிதாக ஒன்று இரண்டு சாராயக் கடைகளை அமைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் காணப்படுகின்றன. இங்கு ஒன்று கூட இல்லை எனவே புதிதாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.