வரலாற்றை சுமந்துசெல்லும் பணியும் இளம் தலைமுறையும்.!

தமிழர்களின் வரலாற்றில் முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும்
கொள்கைகளாகவும் படிப்பினைகளாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்தே வரப்போகிறது...
போருக்கு பின்னரான இந்த ஒன்பது ஆண்டுகளில் முள்ளிவாய்க்காலுடன் எமது வரலாறு தேங்கி சிதைந்தளியாது
அதனை முன்னோக்கி கொண்டு செல்லும் பெரும்பணி அரசியல்வாதிகளின் கைகளிருந்து தேக்கநிலையற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கைகளிற்கு மாறும் சூழமைவு ஏற்பட்டிருக்கிறது.
அங்கு இன்றிருக்கும் ஒருசிலர் உறுதியற்ற அரசியலை எதோவொரு வகையில் சார்ந்திருந்தாலும்
வரலாற்றை சுமந்துசெல்லும் பணி
எங்கு சேரவேண்டுமோ அங்கேயே சேர்ந்திருக்கிறது.
வேறுபாடுகளை கடந்து ஒன்றாக.. தமிழராக... சந்திக்கவும் சிந்திக்கவும் நினைவுகூரவும் ஏற்பட்டிருக்கும் இந்த வாய்ப்பினை
வடக்கு மாகாண சபையும்
முதலமைச்சரும் தமது அதிகாரங்களை பயன்படுத்தி சீர்குலைக்கக் கூடாது.
வரலாற்றுக் கடிவாளத்தை நிரந்தரமாக மாகாண சபைக்குள்ளோ
அல்லது வேறொறு குறுகிய வட்டத்திற்குளோ புதைத்துவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது
இளம் தலைமுறையிடம் அதனை ஒப்படைக்க வேண்டும்.

  18 May 2018 முள்ளிவாய்க்காலில்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.