அதிவேக பாதைகள் மூலம் கிடைக்கும் வருமானம் சீனாவுக்கு இல்லை!

அதிவேக பாதைகள் மூலம் கிடைக்கும் வருமானம் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று உயர் கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபிர் ஹாஷிம் தெரிவிததார்.

 கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக பாதைகளில் குறிப்பிடத்தக்க வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

பொதுவாக அதிவேக பாதைகள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கப் பெறுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வருமானம் சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வெளியாகும் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை பொதுத் திறைசேரி மூலம் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.