வடக்கு மருத்­து­வர்­கள் திங்­கள் போராட்­டம்!!

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அனைத்து அரச மருத்­து­வ­ம­னை­க­ளி­லும்
(யாழ்ப்­பா­ணம் போதன மருத்­து­வ­மனை தவிர்த்து) அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை நடத்­த­வுள்­ளது.
திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் அந்­தச் சங்­கம் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-,
அரச மருத்­துவ அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய மேல­திக கொடுப்­ப­ன­வு­கள் (புதிய சுற்­ற­றிக்­கை­யின்­படி) கடந்த 4 மாதங்­க­ளாக வழங்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகா­ணத்­தில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­க­ளுக்கு மட்­டுமே அவை வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்­பாக அரச மருத்து அதி­கா­ரி­கள் தாய்ச் சங்­கம் பல தட­வை­கள் வடக்கு மாகாண சுகா­தார அதி­கா­ரி­க­ளி­டம் சுட்­டிக்­காட்டி, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கோரி­யி­ருந்து.
அது தொடர்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டாத நிலை­யில் வடக்கு மாகாண அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ரு­ட­னும், மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ள­ரு­ட­னும் பேசசு நடத்­தி­யது. மேல­திக கொடுப்­ப­ன­வு­கள் சிறிது காலத்­தில் வழங்­கப்­ப­டும் என்று அவர்­கள் உறு­தி­ய­ளித்­த­னர். எனி­னும் அவை வழங்­கப்­ப­ட­வில்லை.
இலங்­கை­யின் அனைத்து மாகா­ணங்­க­ளுக்­கும் (கிழக்கு மாகா­ணம் உட்­பட) இந்­தக் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­க­ளின் அச­மந்­தப் போக்­கால் நாம் பணிப்­பு­றக்­க­ணிப்பு நடத்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளோம்.
பணிப்­பு­றக்­க­ணிப்­பால் நோயா­ளர்­க­ளுக்கு ஏற்­ப­டும் சிர­மங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை­யும், அதன் அதி­கா­ரி­க­ளுமே பொறுப்­புக் கூற வேண்­டும். பணிப் புறக்­க­ணிப்பு நடத்­தப்­ப­டும் நேரத்­தில் உயிர்­காக்­கும் அவ­சர சிகிச்­சை­கள் அனைத்து மருத்­து­ம­னை­க­ளி­லும் வழங்­கப்­ப­டும். எமக்கு உரிய பதில் வழங்­கப்­ப­டா­விட்­டால் போராட்­டம் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும். – என்­றுள்­ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.