பிரான்சில் இந்திய தூதுவராலைய,முன்பாக கவயீர்ப்பு!

பிரான்சில் தமிழக தூத்துக்குடியில் நயவம்சமாக இடம்பெற்ற
படுகொலையில் அரசைக் கண்டித்து இந்திய தூதுவராலையம்,முன்பாக கவயீர்ப்பு  இடம்பெறற்றது.
காணொளி - ஆனந் 

தமிழகம் தூத்துக்குடியில் செர்லைட் ஆலையை மூடக்கூறி ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் செய்து பலரைக் கொன்ற தமிழக அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து பரிசு இந்தியத் தூதுவராலயத்தின் முன்னால் 28-05-2018 திங்கட்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை கவயீர்ப்புப் போராட்டம் தமிழீழ மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒன்று கூடி தமது கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஈழத்தமிழர்கள் கருத்துத்தெரிவிக்கையில் காந்தீயவழியைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இந்திய அரசு சனநாயக வழியில் போராடிய தமிழ்மக்கள் மீது சட்டவிதிமுறைகளை மீறி துப்பாக்கி சூடு நடாத்தி பதின்மூன்று பேரைகொன்றதின் ஊடாக காந்தியை மீண்டும் கொலை செய்துள்ளார்கள் என தொரிவித்தார்.
இவ் ஒன்று கூடலில் கருத்துத் தெரிவித்த தமிழக உறவுகள்இ தமிழக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈழத் தமிழர்கள் அணிதிரண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்ததுடன். மக்கள் போராட்டங்கள் இனிமேல் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே இப்படுகொலைகள் இடம் பெற்றிருக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
உலகத்தில் எந்தமூலையிலும் தமிழருக்கு அநீதி ஏற்படும் போது அனைவரும் ஓரணியில் நின்று தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் இ.ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றியடைந்தபோது அதை மழுங்கடிக்க வன்முறையை தூண்டியது போல் தூத்துக்குடியிலும் வன்முறை அரங்கேற்பட்டு படுகொலைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன என கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
இறுதியில் தமிழக அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.