கொழும்பு மாநகர சபையின் நிகழ்வில் உணவுச் செலவு எவ்வளவு தெரியுமா?

கொழும்பு மாநகர சபையின் 1வது பொதுச் சபை நிகழ்வு உணவுச் செலவு ரூபா 1416,825.00
கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு கடந்த 05.04.2018 புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது காலை நேர உணவுக்காக ரூபா 155,025.00 ரசல்ஸ் (பிவிடி) நிறுவனத்திற்கும், பகல் உணவுக்காக ரூபா 990,000.00 ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும், மாலை சிற்றுண்டிக்காக ரூபா 121,800.00 அலும்கா கெட்டர்ஸ் நிறுவனத்திற்கும், இரவு உணவுக்காக ரூபா 150,000.00 ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை நிகழ்வு உணவுச் செலவாக ரூபா 1416,825.00 செலவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தொகையானது கொழும்பு மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கும் 119 உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவின் கிட்டத்தட்ட 35% ஆகும். பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு வீண்விரயமாக்கப்படுவது தொடர்பில் எனது கருத்தை இன்றைய தினம் சபையில் பதிவு செய்திருந்தேன். 119 உறுப்பினர்களை அங்கத்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபையில் காலை உணவு 500 பேருக்கும், மதிய உணவு 500 பேருக்கும், மாலை சிற்றுண்டி 400 பேருக்கும் இரவு உணவு 250 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்லாமல் மதிய உணவுக்காக ஐந்து இடங்களில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலைமையில் மூன்று விலைமனுக்களின் பிரதிகள் மாத்திரமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஜிஹான்ஸ் விவிஐபி இன்டோர் அன்ட் அவுட்டோர் கெட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தின் ஊடாக மதிய போசனத்திற்கு (ரூபா 1980.00 அடிப்படையில்) அனுமதி வழங்கப்பட்ட விலைமனுக்கோரலின் பிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்படவில்லை.

(-உமாச்சந்திரா, பிரகாஷ்-)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.