சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் புகைப்பிடிக்க தடை !

சுவிட்சர்லாந்தின் Ticino மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நடியா கிசோல்பி இது குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார்.

அதாவது உணவகங்களின் வெளிபுறங்களில் இருக்கும் பகுதியிலேயே புகைப்பிடிக்கும் பகுதி மற்றும் புகைப்பிடிக்க கூடாத பகுதி என பிரிக்க வேண்டும் என்பது நடியாவின் வாதமாக உள்ளது.

நடியா கூறுகையில், முழுவதுமாக புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, புகைப்பிடிக்காதவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் தாமஸ் பியூட்லர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்களின் உள்ளே புகைப்பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாகவே தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.