தூத்துக்குடி கலவரத்தை தூண்டியதாக 182 பேர் கைது!

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக இதுவரை 182 பேரை கைது காவலாளர்கள் செய்துள்ளனர். அனைத்து சமூக வலைதளங்களும் சைபர் கிரைம் காவலாளார்கள் கண்காணித்து வருகின்றனர்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டவர்களை பிடிக்க காவலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் வரை காவலாளார்கள் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 182 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், கலவரம் தொடர்பாக நேற்று காலையில் சிப்காட் காவலாளர்கள் 8 பேரையும், தூத்துக்குடி தென்பாகம் காவலாளர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வாட்ஸ்-அப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு செய்தவர்களையும் சைபர் கிரைம் காவலாளார்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், வாட்ஸ்-அப் மூலம் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக திரவியபுரத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.