எங்க பட்டியல் ரொம்ப பெருசு என நிரூபித்த தமிழ்படம்-2.0!

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன் ரிலீசாகிய
”தமிழ்படம்” தமிழ் சினிமாவை எக்கசக்கமாக கலாய்த்திருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் இதுவரை எதை எல்லாம் மாஸ் என எண்ணி இருந்தார்களோ, அத்தனையையும் கேலி செய்திருந்தது தமிழ்படம்.
தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ரிலீசான இத்திரைப்படத்தின் டீசர், இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்திலும் சிவா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்த இவர்கள், இந்த முறை ஒரு படி மேலே போய், தமிழகத்தில் நடந்த அரசியல் சம்பவங்களையும் கேலி செய்திருக்கின்றனர்.
இதனால் இந்த படத்திற்கான மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ்படம் 2.0 டீசரில் விஜய் நடித்திருந்த மெர்சல்,தலைவா,கத்தி போன்ற படங்களையும், அஜீத்தின் மங்காத்தா, விவேகம், விஷாலின் ஆம்பள, துப்பாறிவாளன் ஆகிய படங்களையும் கலாய்த்திருக்கின்றனர். இதெல்லாம் போதாதென விஜய் சேதுபதியின் விக்ரம்வேதாவையும் கலாய்த்திருக்கிறார் சி.எஸ்.அமுதன்.
இதுவரை திரைக்கு வந்த படங்களை மட்டுமல்ல, திரைக்கு வரப்போகும்  படங்களையும் கூட நாங்க கலாய்ப்போம் எனும்படியாக, தமிழ்படம் 2.0 குழு ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது . அதில் ஏழுச்சாமி என சாமி  ஸ்கொயர் படத்தை கலாய்த்திருக்கின்றனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.