சூப்பரான ஆலு 65 எப்படிச் செய்யலாம்??

உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இல்லை. ஸ்கூல் முடிந்து வரும் குழந்தைகளை அசத்தும் வண்ணம் ஸ்பெஷல் சிற்றுண்டியாக உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு 65 எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாமா...?


தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காய்ந்த மிளகாய் – 4

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

பூண்டு – 10 பல்

இஞ்சி – அரை அங்குலத் துண்டு

தயிர் – கால் கப்

மைதா மாவு – 2 மேசைக்கரண்டி

சோள மாவு – ஒன்றரை மேசைக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி

எண்ணெய் – முக்கால் கப்

செய்முறை :

உருளைக்கிழங்கைப் பாதியளவு வேகவைத்துச் சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவிவிட்டுச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ளவும். மைதா மாவு, சோள மாவு இரண்டையும் தனித்தனியாகச் சலித்துச் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் காய்ந்த மிளகாய், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக் கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,பேக்கிங் பவுடர், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாகச் சேரும்படி நன்கு புரட்டி விடவும். புரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாகப் புரட்டிவைத்து, அதை அரைமணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்து பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.

மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டுத் தாளித்த பின் அதில் வறுத்த உருளைக்கிழங்கைப் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

சுவையான சூடான ஆலு 65 தயார்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.