சிறுமி விற்பனை விவகாரத்தில் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் ஐந்து வயது சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேரையும் தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரமோத ஜெயசேகர உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள கடத்தப்பட்ட சிறுமியை, 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் தந்தையிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியை விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் அசோக சேபால உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதனையடுத்து மேலும் நான்கு பேர் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.