இரு சக்கரகார்கள் மிக விரைவில்!

இருசக்கர கார்கள் அடுத்த 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறித்த இருசக்கர கார்கள் சீனாவில்

தயாரிக்கப்பட்டு வருகிறது.பெருகிவரும் வாகனங்கள், அதிகரித்து வரும் விபத்துக்கள் போன்றவற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க கணினி மூலம் இயங்கும் இருசக்கர கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பெய்ஜிங் லிங்யூன் இன்டலிஜென்ட் டெக்னாலஜி (Beijing Lingyun Inteligent Technology) நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைரோ கார் (Gyro Car) என அழைக்கப்படும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த வகைக் கார்களில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.அதிகபட்சமாக மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனம் முழுவதும் கணினியால் இயக்கப்படும்.ஆக்ஸிலரேட்டர்,
பிரேக் என அனைத்தும் கணினியில் பொருத்தப்பட்டுள்ள மவுஸ் மூலமும் இயக்கிக் கொள்ளலாம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.