ஜெனீவாவில்கருணாவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டாம்!

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா  என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், திருக்கோவில் பகுதியில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தான் முரளிதரனுக்கு எதிராக, ஜெனீவா மனித உரிமை பேரவையில் சாட்சி வழங்க தயார் என, புலம்பெயர்ந்தவரான கலாநிதி போல் நிவுமன் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி 600 பொலிஸ் அதிகாரிகள் திருக்கோவில் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் இந்த சம்பவத்தின் போது மாவனெல்ல மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸார் உயிர் தப்பியமையும் குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.