பொறுமையை சோதித்து பார்க்கிறது மத்திய அரசு.!

காவிரி ஆணைய விவகாரத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தது மத்திய அரசு. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும் என்றும்,  காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை உள்ளடக்கியது. 

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு , ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

இதில், தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்  மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு எங்களைக் கேட்காமலேயே அறிவித்துள்ளது.  இந்த விவகாரத்தில் எங்களின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கிறது. மேலும் இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.