மத்தள விமான நிலையம் மூடப்படும் அபாயம்!

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ச விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்தள ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.
இது விடயம் குறித்து மத்தள விமான நிலைய முகாமைத்துவத்துக்கு ஏற்கனவே பிளை டுபாய் நிறுவனம் அறிவித்துள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.
மத்தள விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது.
போதிய பயணிகள் இல்லாமையால், வருமானம் கிடைக்கவில்லை என அந்த நிறுவனமும், சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், விமானங்களில் பறவைகள் அடிக்கடி மோதுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுவரை சேவைகளை மேற்கொண்டு வந்த பிளை டுபாய் விமான நிறுவனமும் வெளியேறியதால், மத்தள விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக அங்கு பணியாற்றும் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.