மெர்சல் ஆட்டக்காரருக்கு மெழுகில் சிலை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது.


‘மேடம் துசாட்ஸ்’ எனும் அருங்காட்சியகம் உலகெங்கும் அதன் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சினிமா, விளையாட்டு, அரசியல், வரலாறு போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுவர்களைக் கெளரவிக்கும் விதமாகவும், அவர்களை ஒரே குடையின்கீழ் இணைக்கும் பொருட்டும் அவர்களின் மெழுகுச் சிலைகளை இந்த அருங்காட்சியகத்தில் திறப்பது வழக்கம்.

அவ்வகையில் அந்த அருங்காட்சியகத்தின் டெல்லி கிளையில், கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்தியக் கேப்டன் கோலியைக் கெளரவப்படுத்தும் விதமாக இன்று (ஜூன் 6) அவரது சிலையைத் திறந்துள்ளனர். விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை மெஸ்ஸி,உசேன் போல்ட், சச்சின், கபில்தேவ் ஆகியோரின் சிலையை மட்டுமே இந்நிறுவனம் திறந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது கோலியும் இணைந்திருக்கிறார்.

இந்தச் சிலை திறப்பு பற்றிக் கூறியுள்ள கோலி, “இந்த அருங்காட்சியகத்தில் சிலை வைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் மனதிலிருந்து என்றும் நீங்காத தருணமாக இந்நிகழ்வை ஆக்கிய அனைவருக்கும் நன்றி. இதற்குக் காரணமாகிய எனது ரசிகர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.