நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது குறித்த விவாதம் அவசியமற்றது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் எவருக்கும் விவாதம் நடத்த முடியாது என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

 ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்  நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

 இவ்வாறான நிலையில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது தொடர்பான விவாதம் அவசியம் அற்றது.

 அரசாங்கம் மக்களது ஆணைக்கு இணங்கி செயற்படுமாக இருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும்.

 ஆனால் அதற்கு 20ம் திருத்தச் சட்டம் அவசியமா? இல்லையா? என்பது தொடர்பில் வேண்டுமாக இருந்தால் விவாதத்தை நடத்தலாம்.

 இதற்கு ஜேவிபி தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.