ஈரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்கா!

ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அப்படி நிறுத்தாவிடில் கூடுதலாக வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், நவம்பர் 4ஆம் தேதிக்குள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா மற்றும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்தால் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும், சீனாவும் வரி உயர்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக அவர் கூறினார்.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முன்னிலையில் உள்ளன. அனைத்து நாடுகளும் இப்போதிலிருந்தே ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கத் தொடங்கி நவம்பர் 4ஆம் தேதிக்குள் முழுமையாகக் நிறுத்திவிட வேண்டும் என்று அவர் கூறினார். ஈரானை வர்த்தக ரீதியாகத் தனிமைப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த எச்சரிக்கை என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.