ஆசியாவிலேயே சிறந்த அக்கரைப்பட்டி!

ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சார்பாக திருச்சி அக்கரைப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான சாய்பாபா
ஆலயம் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். மராட்டிய மாநிலத்தில் இன்றைக்கு உலகத்தின் சாய் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கும் சீரடிக்கு சாய்பாபா முதன்முதலில் வந்து அமர்ந்த இடம் எது தெரியுமா?
பாறைக்குள் இருந்து முளைத்து வந்த ஒரு வேப்பமரத்தின் அடியில்தான் அமர்ந்தார் சாய்பாபா. அந்த இடமே குருஸ்தான் என்று கோடானு கோடி மக்களால் கும்பிடப்படுகிறது. அங்கே அமர்ந்துதான் சீரடி சாய்பாபா பல்லாயிரக்கணக்கான பேரின் குறை தீர்த்தார், பல கோடி பேரை கரை சேர்த்தார். சீரடிக்கும் அக்கரைப்பட்டிக்கும் என்னே ஒற்றுமை.
சாய்பாவின் கருணையும், அருளும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாக முடியும். ஆம்... சீரடியைப் போல அக்கரைப்பட்டியில் சாய் மந்திர் ஆலயம் கட்டலாம் என்று முடிவானதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். எப்படி சீரடியில் பாறைகளுக்கு இடையில் வேப்பமரம் முளைத்ததோ அதேபோல, அக்கரைப்பட்டியிலும் பாறைக்கு இடையே ஓர் வேப்பமரம் வளர்ந்திருந்தது.
அட என்ன ஒரு தீர்க்க தரிசனம். அந்த பாறைக்கும்,அந்த வேம்புக்கும் நாம் அக்கரைப்பட்டி சீரடி சாய்பாபாவின் குருஸ்தானம் ஆவோம் என்று தெரியுமா என்ன? சீரடியில் நிலவிய அதே அமைப்பு, அக்கரைப்பட்டியிலும் நிலவியது எப்படி? இது யாருடைய திட்டமும் அல்ல, சாய்பாபாவின் சித்தம்.
என்.டி.சி. லாஜ்ஸ்டிக் குழுமத்தின் தலைவரும், ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலருமான கே.சந்திரமோகன் அவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷ வரம்தான் சாய்பாபாவின் கட்டளை. சாய்பாபாவால் அருள்பாலிக்கப்பட்ட இன்னொரு சீரடியாகத்தான் இருக்கிறது இந்த அக்கரைப்பட்டி பாறையும், வேப்பமரமும். இந்த ஒற்றுமை சாட்சாத் சாய்பாபாவே தனக்கான இடத்தை அக்கரைப்பட்டியில் தேடிக் கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. 3.6 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குருஸ்தானமே தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த குரு ஸ்தானமாகும்.
இப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தில்தான் ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சாய்பாபா கோயிலை 2009 ஆம் ஆண்டு முதல் கட்டி எழுப்பியிருக்கிறது. இந்த மானுட சமுதாயத்துக்கு பயன்படுவதற்கென்றே வாழ்ந்த சாய்பாபாவுக்கென கட்டப்படும் கோயில் அவரது வாழ்வைப் போலவே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கட்டியிருக்கிறது ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட்.
சமயபுரம் அருகே அக்ரஹாரப்பட்டி என்கிற அக்கரைப்பட்டியில் 50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அந்த வேப்பரமத்தை மையமாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது பிரம்மாண்ட சாய்பாபா மந்திர். அளவற்ற சாய்பாபாவின் அருளால் இந்த பெருங்கோயில் பெற்ற புகழ் என்ன தெரியுமா? ஆசியாவிலேயே மிகப்பெரிய சீரடி சாய்பாபா கோயில் அக்கரைபட்டிதான் என்ற பெருமைபெற்று செம்மாந்து நிற்கிறது சாய்பாபா கோயில்.
பிரம்மாண்ட புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மண்ணுக்கு இப்படி ஒரு கண்ணியம் கிடைத்திருக்கும். அற்புதமாக எழுந்து நிற்கும் இந்த ஆன்மீகத் திருத்தலத்தின் மகா கும்பாபிஷேகம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேகம் மட்டுமல்ல அந்த நாளில் இன்னொரு விசேஷமும் இணைந்திருக்கிறது. அந்த இரட்டை விசேஷம் என்ன என்பதைப் பார்ப்போம், காத்திருங்கள்.
(பாபா பரவசம் வெள்ளியன்று தொடரும்)
தொடர்புக்கு...
SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
akkaraipattishirdibaba@gmail.com
http://akkaraipattisaibaba.com/

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.