பிரதீபாவின் கடிதம் !

கடிதம் எழுதுவது ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. தமிழகத்தில் தற்போதைய முதல்வரும் சரி, மறைந்த முன்னாள் முதல்வரும் சரி; மத்திய அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துக்

கடிதம் எழுதுவதுண்டு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் கடிதம் எழுதும் காலம் மாறி, மத்திய அரசின் ஒரு சில முடிவுகளால் தற்கொலைக் கடிதங்கள் அதிகரித்துள்ளன.

கோரிக்கைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட கடிதங்களுக்கு பதில் கிடைத்ததோ இல்லையோ, ஆனால் இதுபோன்ற தற்கொலைக் கடிதங்களுக்கு அரசு என்ன சொல்லப்போகிறது? நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து கூறும் மக்களின் கண்களையும் ஒரு நிமிடம் கலங்கவைக்கும் கடிதம்தான் பிரதீபாவின் தற்கொலைக் கடிதம்.

இந்தாண்டுக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் தற்கொலையை ஒரு முடிவாக எடுத்த பிரதீபா, இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது தந்தைக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், நீட் தன்னை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தியிருக்கிறது என்பதை உருக்கத்துடன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

உங்க அம்மு உங்ககிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி என்று ஆரம்பித்தது அந்தக் கடிதம். ”நீங்க என் மேல வெச்சிருந்த நம்பிக்கைய என்னால காப்பாத்த முடியல. தோல்வியால என்னால யாரையும் பார்க்க முடியல. எத்தனை முறைப்பா தோல்வியை தாங்குவேன். நீங்க எல்லாரும் எனக்கு வரம்ப்பா, ஆனா நான் உங்களுக்கு கிடைச்ச சாபம் பா. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை தடுக்காம இருந்தா, நான் அப்பவே இந்த முடிவை எடுத்திருப்பேன். என்னாலதான நீ எல்லார் முன்னாடியும் தலைகுனிந்து நடக்குற.

உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைச்சா ரொம்ப வலிக்குது. ஆனா, அதைவிட அதிகமான வலியை தோல்வி எனக்கு தந்துவிட்டது. உங்க எல்லோர் கூடயேயும் ரொம்ப நாள் வாழ ஆசை. ஆனா, எனக்கு தகுதி இல்லை” என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.