ஜேர்மனியின் சர்வதேச ரயில் சேவை திட்டம் கிடப்பில் !

லண்டன், கொலோன் மற்றும் ஃப்ராங்க்பர்ட்டுக்கிடையே அதிவேக ரயில் சேவை தொடங்கும் திட்டத்தை ஜேர்மனியின் அரசு ரயில்வே துறை கிடப்பில் போட்டுள்ளது.


கடந்த ஆண்டு வரை அதிவேக ரயில் சேவையை தொடங்க ஆர்வத்துடன் இருப்பதாக

தெரிவித்த Deutsche Bahn (DB), தற்போதைக்கு ரயில் சேவை தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி விட்டது.

திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு பிரெக்சிட் காரணம் என்பதை அது மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

அரசியல் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என அது தெரிவித்து விட்டது.

2013இல் முறையான அனுமதி பெறுதல் போன்ற ஆரம்ப கட்ட செயல்பாடுகளை தோடங்கிய DB, பப்ளிசிட்டிக்காக லண்டனில் தனது ரயில் பெட்டி ஒன்றை கூட மாதிரிக்கு நிறுத்தியது.

இந்நிலையில் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காரணமாக சர்வதேச அதிவேக ரயில் சேவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.