ஹிட்லர் கருத்தை எனது முன்னிலையில் கூறியிருந்தால் மறுத்திருப்பேன்- ரணில்!

மனிதர்களைக் கொலை செய்த ஹிட்லர் போன்று மாறுமாறு புத்தர் பெருமான் ஒரு போதும்
உபதேசம் செய்ய வில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தறை, மஹாமந்திந்த பிரிவெனாவின் 125 ஆவது வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.
தான் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவ்வாறான ஒரு கருத்து கூறப்பட்டிருந்தால், தான் அந்த நேரத்திலேயே அதனை எதிர்த்திருப்பேன். பௌத்த மதத்தையும், ஹிட்லரையும் ஒருபோதும் ஒன்றாக பார்க்க முடியாது எனவும், இந்த கருத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் பெருமான் எந்த வேளையிலும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்குமாறே உபதேசம் செய்துள்ளார் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்தாவது இந்த நாட்டை கட்டியெழுப்புமாறு  கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.