ரெலோ அமைப்பு பயன்படுத்திய புதையல் ராமேஸ்வரத்திலும் கண்டுபிடிப்பு!


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோனியார்
புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான இவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்ட பள்ளம் தோண்டு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்கு அடியில் பெட்டிகள் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பெட்டிகளை மீட்டனர். மொத்தம் 23 பெட்டிகள் அங்கிருந்து எடுக்கப்பட்டது.

பெட்டியை போலீசார் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கி தோட்டாக்களும், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டா உள்பட பலவகை தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தன.

சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு துப்பறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் படை போலீசார் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இவை இலங்கை விடுதலை புலிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும் தோட்டாக்கள், வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Powered by Blogger.