காணாமல்போனவர்களின் விடயத்தில் தீர்வுகள் குறித்த வாக்குதிகளையும் வழங்க முடியாது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விபரங்களை இன்னும் ஓரிருமாதத்தில் வெளியிடுவோம் இது தொடர்பான உறுதிமொழியை எழுத்து மூலம் வழங்க தயார் என

காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இன்று அவர் அதற்கு மாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் நான் சரணடைந்தவேளை காணாமல்போனவர்களின் பட்டியலை அதிகாரிகளிடமிருந்து கோருவேன் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எனது அலுவலகத்தினால் போலியான வாக்குறுதிகளையோ அல்லது உடனடி தீர்வுகள் குறித்த வாக்குதிகளையும் வழங்க முடியாது என தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.