அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டது இல்லை! வேண்டாம்- சம்பந்தன்!

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், இதன் போது எமது நீண்டகால கொள்கையின் படி மக்களுக்கு உரியவை கிடைக்கும் வரை மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் அமைச்சு பதவிகளை பெறுவதில் எவ்வித பயனும் இல்லை என இரா.சம்பந்தன் கூறினார்.
Powered by Blogger.