சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

பொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை 10 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு அனுமதித்த கெப்பத்திக்கொல்லாவ மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹர்ச த அல்விஸ்,  பிணையாளர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (21) பதவிய நீதவான நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி மீண்டும் பதவிய சுற்றுலா நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 8ஆம் திகதி கூரைத்தகடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெலிமடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்.

குற்றவாளியான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த சம்பவம் தொடர்பில் வெளியில் தெரிவித்தால் "துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவேன்" என பாதிக்கப்பட்ட சிறுவனை அச்சுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.