யாழில் பொங்கியெழுந்து ரஜினிகாந்திற்கெதிராக போராட்டம்!

நடிகர் ரஜினிகாந் தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை மிகவும் கேவலமாகக் கொச்சைப்படுத்தியுள்ளார். மக்கள் எதிர்த்ததன்
காரணமாகவே பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளது எனத் தெரிவித்துப் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிலும், உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ்மக்களின் பணத்தையெல்லாம் தன்னுடைய நடிப்பால் சூறையாடி கோடீஸ்வரராக இருந்து கொண்டு வேதாந்தக் கம்பனிக்கும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் செப்பு ஆலை நிர்வாகத்துக்கும் வக்காலத்து வாங்கும் கேவலமான வேலையை ரஜினிகாந் செய்து கொண்டிருப்பதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி. கா. செந்திவேல் மிகுந்த ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடிய மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின் மீது தமிழகப் பொலிஸாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை(01) முற்பகல் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஜினிகாந்துக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். எங்களுடைய நாட்டிலும் ரஜினிகாந் போன்ற பெரு முதலாளிய அருவருடிகளுக்கெதிராக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

ரஜினிகாந் போன்று வேறு பலரும் தூத்துக்குடி மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.