கலகொடஅத்தே ஞானசாரதேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஆறுமாத காலங்களில் கழிக்கும் வகையில் ஒரு வருடம் கடூழிய சிறைத் தண்டனையை [one-year rigorous imprisonment which ends in 6 months] ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

அத்தோடு ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதமும். எக்னெலிகொடவின் மனைவிக்கு 50000 ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை, 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவதூறாக பேசி, மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், ஞானசாரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதவான் உதேஸ் ரணதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த மே மாதம் 24ம திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக ஹோமாகம நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.