அர்ஜூன் அலோசியஸிற்கு பிணை மறுப்பு!

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோர் பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த மணு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கியது சட்டரீதியாகவே என்று சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும் விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.