சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குடும்பத்திலிருந்து சிறுவர்கள் தனிமைப்படுத்ததல்!

அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையின் மூலம் சட்டவிரோதமாக
குடியேறுபவர்களின் குடும்பத்திலிருந்து, இதுவரை சுமார் 2000 சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு வார காலங்களில் மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களிடமிருந்தே இவ்வாறு சிறுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனைத் தடுப்பதற்காக மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் தடுப்புச் சுவரை கட்டுவதற்கான தீர்மானத்தினை ட்ரம்ப் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தினால். சட்டவிரோதமாக குடியேறுபர்களில் சிறுவர்களை பிரிப்பது தொடர்பிலான கொள்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து, குழந்தைகளை பிரிக்கும் கொள்கையானது, சட்டவிரோத எல்லை தாண்டல்களை தடுப்தற்கான வழிமுறையாக அமையும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்கை மாளிகையின் குறித்த அறிவிப்புக்கு எதிராக தற்போது கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமான எல்லைகளை தடுப்பதற்கான ஒரு வழி என வெள்ளைமாளிகை பேச்சாளர் சாரா சண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில், தற்போது, சுமார் 2000 வரையிலான சிறுவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.