காலா: தமிழ் சினிமா பெற்றது, கற்றது என்ன?

தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டில் ரஜினிகாந்த் நடித்து வரும்
படங்கள் வசூல் ரீதியாக சாதனை நிகழ்த்தினாலும், நிகழ்த்தாவிட்டாலும் அதிர்வுகளை, ஆச்சர்யங்களை, விட்டுச் செல்ல தவறியதில்லை.
ரஜினிகாந்த் படம் வெளியாவதற்கு முதல் இரண்டு வாரங்கள், ரிலீசுக்கு பின் அதிகபட்சம் மூன்று வாரங்கள் புதிய தமிழ்ப் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள், படம்வெற்றி என்றால் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும்.
காலா படத்திற்கு அப்படியொரு அதிசயம் நடக்கவில்லை, ஆனால் திரைப்படத் துறையில் பண முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காலாவை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் வியாபாரம், படத்திற்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் தடுமாறிப் போனார்கள்.
காலா படத்தை திரையிட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்த தொகை சுமார் 60 கோடி. இதில் 21 முதல் 25 கோடி வரை வசூல் மூலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எஞ்சிய 35 கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் இல்லாமல் தனிநபர் வசம் முடங்கிப் போனதால் பைனான்சியர்களும் கொடுத்த உத்திரவாதப்படி தங்களை நம்பியிருந்த கஸ்டமர்களுக்கு கடன் கொடுக்க தடுமாறிப் போனார்கள்.
ஒரு படம் வெற்றி பெற்று வசூல் குவியத் தொடங்கினால் புதிய முதலீடுகள், பணப்புழக்கம் அதிகரிக்கும். காலா அதனை கட்டிப்போட்டு விட்டதால் திரைத் துறையில் பணப்புழக்கம் இன்று வரை தடுமாற்றத்தில் உள்ளது.
வசூல் முக்கியத்துவம் உள்ள நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களை தூக்கி விட்டு அனைத்துக் காட்சிகளையும் குறிப்பிட்ட படத்துக்கு ஒதுக்கி முதல் மூன்று நாள்களில் வசூலை குவிக்க மால் தியேட்டர்கள், மாயாஜால், சென்னை ரோகிணி காம்ப்ளக்ஸ், இது போன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முயற்சித்தன. முதல் நாளே அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
இதனால் மாற்று திரைப்படங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாமல் தியேட்டர் நிர்வாகம் சிரமப்பட்டது.
அதிகாலை காட்சி, மற்றும் முதல் நாள் நான்கு காட்சிகளை ரஜினி ரசிகர்கள், தொழில் முறை வியாபாரிகள் காண்ட்ராக்ட் அடிப்படையில் மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கும் முயற்சி காலா படத்தில் நிறைவேறவில்லை.
மொத்த டிக்கெட்டையும் வாங்கி விற்பனை செய்ய முடியாமல் ரசிகர்கள் கேட்ட விலைக்கு விற்பனை செய்தனர். இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடி வரை முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் 50% முதலீடு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காலா படத்திற்கான ஏரியா உரிமை விலை அதிகமாக கூறப்பட்டதால் அவுட் ரேட் அடிப்படையில் படத்தை வாங்க விரும்பாததால் வியாபாரம் தேக்க நிலையை அடைந்தது. ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்களுக்கு இது போன்ற சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை. காலா அந்த சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறது.
செங்கல்பட்டு ஏரியாவில் லைக்கா நிறுவனம் திரையரங்குகளில் நடத்திய பரிசோதனையில் சிக்கிய விநியோகஸ்தர்கள் சங்க தலைவர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.