கடனைத் திருப்பிச் செலுத்தத் தயார் !

ரூ.13900 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை விற்று
இந்தியாவில் பொதுத் துறை வங்கியிடம் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தத் தயாராக உள்ளதாக விஜய் மல்லையா இன்று (ஜூன் 26) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.9000 கோடி கடனாகப் பெற்றிருந்தார். அவருடைய கிங் ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் அவரால் கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை. வங்கிகளில் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதற்காகச் சம்பந்தப்பட்ட வங்கிகள் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது பண மோசடி வழக்கு தொடர்ந்தது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டப்படி நீதிமன்றம் மூலம் அமலாக்கத் துறை விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி, வாரண்ட் உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதனால், மேலும், அவர் வேறு எங்கும் தப்பிச் செல்லாமல் இருக்க அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
இதையடுத்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வந்தது. அப்போது லண்டன் ஸ்காட்லான்ட் யார்டு போலீஸாரால் இரு முறை கைது செய்யப்பட்டு சில விநாடிகளில் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் இன்று விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களிடமுள்ள ரூ.13900 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பட்டியலிட்டு, அதனை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விற்பனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.