வானிலிருந்து திடீரென விழுந்த உயிரிகள்!


சீனாவின் Shandong மாகாணத்திலுள்ள Qingdao நகரில் திடீரென்று
வானிலிருந்து கணவாய், நட்சத்திர மீன் போன்ற கடல் உயிரிகள் விழத் தொடங்கியதைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பின்னர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவலாயின.Qingdaoவின் வானிலை ஆராய்ச்சி மையமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டதால் அவை போலியான படங்கள் அல்ல என்பது உறுதியானது.

ஒரு கணவாய், கடற்சிப்பிகள், இறால் போன்றவற்றை படங்களில் காணலாம்.சீனாவில் வீசிய பயங்கர புயலின்போது இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது.

கடல் நீரின்மீது சுழல் காற்றுகள் ஏற்படும்போது அதனால் கடல் உயிரிகள் வானத்திற்கு இழுக்கப்பட்டு பின்னர் வீசும் பலத்த காற்றினால் அவை வீசி எறியப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.