காதர் மஸ்தானை நியமித்தமை கண்டனத்திற்கும் வேதனைக்கும் உரிய விடயம்-அந்தணர் ஒன்றியம் கண்டனம்.!

இந்து கலாசார அமைச்சராக காதர் மஸ்தானை நியமித்தமை கண்டனத்திற்கும் வேதனைக்கும் உரிய விடயம் உடனடியாக மாற்றம் வேண்டும் அன்றேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையலாம் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கண்டனம்.


இதுபற்றி ஒன்றிய செயலாளர் எமக்கு மேலும் தெரிவிக்கும் போது இலங்கையில் இந்துக்களின் பாரம்பரியமானது வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே இருந்து சந்துள்ளதென்பது வரலாற்றுச் சான்றாகும். அப்படிப்பட்ட இந்த நிலையில் உண்மையில் நிதானமான நல்ல சூழலை விரும்புகின்ற எந்த அரசாங்கமும் செய்யாத ஓர் வேலையினை நல்லாட்சியின் பேரால் மைத்திரி அரசாங்கம் செய்துள்ளது. 

மதங்கள் என்பது உணர்பூர்வமானவை அவற்றினை சொல்லினால் செயலினால் நாம் கண்டுகொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் தம் மதங்கள் பெரிதே அவர்களின் உணர்வுகள் பெரிதே. அதனை நல்லாட்சி அரசு செய்ய தவறிவிட்டது. மத இணக்கம் எனும் பெயரினால் மக்கள் மனங்களை புண்படுத்திக் கொண்டே இருக்கின்றது. இனத்தினை அழித்து முடித்தார்கள் இப்போது மதத்தினை அழித்து முடிக்க நினைக்கின்றார்களோ என எண்ணவேண்டியுள்ளது. இப்போது இந்துமத கலாசார அமைச்சுப் பதவியேற்றுள்ள காதர் மஸ்தான் குருமன்காட்டு சந்தியில் தமிழரின் காணியில் இருந்த மில் காணியினை வாங்கும் போது அதில் கோவிலை இடித்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அத்தோடு மட்டுமல்ல இந்துக்கள் புனிதமாக கும்பிடும் ஆவினங்களை கொலை செய்யும் கொல்களங்களையும் கசாப்புக் கடைகளையும் வைத்திருப்பவர். விக்கிரக வழிபாடுகளை எதிர்க்கின்ற இஸ்லாமியர்களால் எவ்வாறு இந்து சமயத்தை காக்க முடியும் என்று கேட்கின்றோம்.
ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வாரா இவர் இந்து சமய அறிவு ஏதாவது உள்ளதா அல்லது சமய நிகழ்வுகளை அறிந்தவரா எந்த அடிப்படையில் இவரை அரசாங்கம் தெரிவு செய்தது. இதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்ன சொல்லப் போகின்றனர். புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஆக மொத்தத்தில் தமிழர்களின் இருப்பு ஏனைய இனங்களுக்கு சவாலானது என்பது உண்மை அதற்காக மதங்கள் பண்பாடுகளை அழித்தால் அந்த இனம் அழியும் என்பது உலக வரலாற்று உண்மை அந்த வகையிலே இந்த அமைச்சுப் பதவி வழங்கியமை அனைத்து தமிழ் இனத்தின் ஒருமித்த எதிர்ப்பையும் நாம் வெளியிட்டு கொள்கின்றோம்.

குருமார்கள் மதங்களை சார்ந்துள்ளவர்கள் அவர்கள் ஆலய வழிபாடுகளோடு மட்டும் இருந்துவிட முடியாது மதங்களை பாதுகாக்கவும் வளர்கவும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். இந்துக்கள் எந்த இனத்தினருடை மதத்தினையும் பின்பற்றுவதோ விமர்சனம் செய்வதோ மதம் பரப்புவதோ கிடையாது. அதனை அனைவரும் விளங்கிக் கொள்ளட்டும். 
ஆக மொத்தத்தில் உடனடியாக பிரதி அமைச்சராக இருக்கின்ற காதர் மஸ்தான் பதவி தானாக விலகினால் சிறந்தது. அதவே அவரது கௌரவமாகவும் இருக்கும் ஏனெனின் மாற்று மதங்களை இஸ்லாம் ஏற்பதில்லை. அவர்களுக்கு தங்கள் மதங்ஙள் சம்பிரதாயங்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட எமக்கு எம்மதம் எம் இன இருப்பு மிக முக்கியம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.