ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு!

ஈரோடு மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகளும் அதிகமாக வந்திருந்தனர்.

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைவாக இருந்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழையினால் இந்த மாட்டுசந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.
இன்று காலை நடந்த மாட்டுச்சந்தைக்கு 400 பசுமாடுகள், 350 எருமைகள் மற்றும் 200 வளர்ப்புகன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் பசுமாடு 10 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமைகள் 18 ஆயிரம் முதல் 34 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ஆயிரம் ரூபாய் முதுல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருந்தது.வெளி மாநில வியாபாரிகள் அதிகமாக வந்திருந்த நிலையில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.